/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பெருந்துறை கொங்கு பாலிடெக்னிக் கல்லுாரியில் இருபெரும் விழா
/
பெருந்துறை கொங்கு பாலிடெக்னிக் கல்லுாரியில் இருபெரும் விழா
பெருந்துறை கொங்கு பாலிடெக்னிக் கல்லுாரியில் இருபெரும் விழா
பெருந்துறை கொங்கு பாலிடெக்னிக் கல்லுாரியில் இருபெரும் விழா
ADDED : மார் 04, 2026 09:06 AM

பெருந்துறை: பெருந்துறை கொங்கு பாலிடெக்னிக் கல்லுாரியில் ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா நடந்தது. கொங்கு கலை அறிவியல் கல்லுாரி தாளாளர் சச்சிதானந்தன் தலைமை வகித்தார். கொங்கு பாலிடெக்னிக் கல்லுாரி தாளாளர் கார்த்திகேயன் முன்னிலை வகித்தார்.
கொங்கு வேளாளர் கல்வி அறக்கட்டளை துணை தலைவர்கள் இளங்கோ, கார்த்திக் முருகேசன் வாழ்த்தி பேசினர். முதல்வர் செந்தில்குமார் ஆண்டறிக்கை வாசித்தார். சிறப்பு விருந்தினராக பட்டிமன்ற பேச்சாளர் பழனி கலந்து கொண்டு, பரிசு வழங்கி பேசினார்.
முன்னதாக நடந்த விளையாட்டு விழாவுக்கு, சிறப்பு விருந்தினராக இந்திய ரயில்வே துறை முன்னாள் கைப்பந்து விளையாட்டு வீரர் திருச்சி ஜெய்சங்கர் பங்கேற்றார்.
பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்று சாதனை படைத்த மாணவர்களுக்கு, கோப்பை, ரொக்கம் மற்றும் பரிசுகளை வழங்கினார். விழாவில் கொங்கு வேளாளர் கல்வி அறக்கட்டளை பாரம்பரிய பாதுகாவலர் பாலசுப்பிரமணியம், கொங்கு பொறியியல் கல்லுாரி தாளாளர் கிருஷ்ணன், கொங்கு ஐ.டி.ஐ., முதல்வர் தினேஷ்குமார், பெருந்துறை கல்வி அறக்கட்டளை தலைவர் பல்லவி பரமசிவம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

