ADDED : டிச 20, 2024 07:09 AM
தாராபுரம்: தாராபுரத்தை அடுத்த செட்டிபாளையத்தை சேர்ந்தவர் ஹரி பிரசாத், 32; தாராபுரம் பஸ் ஸ்டாண்டில் நேற்று முன்தினம் நின்றிருந்தார். அப்போது பைக்கில் வந்த இருவர், அவரிடம் முகவரி கேட்பது போல் பேச்சு கொடுத்தனர். ஹரிபிரசாத் பதில் கூற முயன்ற போது, எதிர்பாராத விதமாக, அவரது பாக்கெட்டில் இருந்த செல்போனை, பைக் பின்னால் அமர்ந்திருந்த ஆசாமி பறிக்க, மின்னல் வேகத்தில் பைக் பறந்தது.
ஹரிபிரசாத் புகாரின்படி வழக்குப்பதிவு செய்த தாராபுரம் போலீசார், பைக் பதிவெண்ணை கொண்டு விசாரணையில் ஈடுபட்டனர். இதில் கரூர் மாவட்டம் குளித்தலையை சேர்ந்த சஞ்சய், 21, ஷ்யாம், 24, என்பதும், கோவிந்தாபுரம் அருகே கோழிப்பண்ணையில், இருவரும் வேலை செய்து வந்ததும் தெரிந்தது. இருவரையும் கைது செய்த போலீசார், மாஜிஸ்திரேட் முன்னிலையில் ஆஜர்படுத்தி கிளை சிறையில் அடைத்தனர்.