/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கொலையாளிகள் இருவர் குண்டர் சட்டத்தில் கைது
/
கொலையாளிகள் இருவர் குண்டர் சட்டத்தில் கைது
ADDED : ஆக 21, 2025 02:05 AM
ஈரோடு, ஈரோட்டில், கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய இருவர், குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.
ஈரோடு, சூரம்பட்டி நால்ரோடு கருப்பண்ணசாமி கோவில் வீதியை சேர்ந்த முருகேசன் மகன் விக்கி (எ) விக்னேஷ், 27. இவர் மீது கொலை வழக்கு, வழிப்பறி, திருட்டு வழக்கு, அடிதடி வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதே போல், ஈரோடு சென்னிமலை ரோடு சக்திவேல் மகன் விஜய், 24, மீதும் கொலை வழக்கு உள்ளது.
சில தினங்களுக்கு முன், இருவரும் அடிதடி வழக்கில் தாலுகா போலீசாரால் கைது செய்யப்பட்டு ஈரோடு கிளை சிறையில் உள்ளனர். இவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ், சிறையில் அடைக்க வேண்டும் என, எஸ்.பி., மூலம் கலெக்டருக்கு பரிந்துரைத்தனர்.
ஈரோடு கலெக்டர் கந்தசாமி பரிசீலனை செய்து, இருவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதன்படி நேற்று முன்தினம் இருவரும், கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.