ADDED : ஆக 12, 2024 06:41 AM
தாராபுரம்: தாராபுரத்தை அடுத்த உப்பாறு அணையை சேர்ந்தவர் கதிரேசன், 33; ஹூண்டாய் காரில் நேற்று முன்தினம் மதியம், பூளவாடி நோக்கி சென்றார்.
அவருடன் பொன்னானிபாளையத்தை சேர்ந்த கதிர்வேல், 29; கெத்தல்ரேவ் கலையரசன், 17, சென்றனர். ரங்கம்பாளையம் பிரிவு எதிர்பாராதவிதமாக கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோர மின் கம்பத்தில் மோதியது. படுகாயமடைந்த மூவரும் மீட்கப்பட்டு தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். டாக்டர் பரிசோதனையில் கதிரேசன் இறந்து விட்டது தெரிந்தது. மற்ற இருவரும் கவலைக்கிடமான நிலையில், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். * தாராபுரம், காமராஜபுரத்தை சேர்ந்தவர் யஷ்வந்த், 20; தாராபுரம் வடக்கு காளியம்மன் கோவில் வீதியில் பைக்கில் சென்றார். அதே பகுதியை சேர்ந்த, 17 வயது சிறுவன் ஓட்டி வந்த ஸ்கூட்டி மீது பைக் மோதியதில் படுகாயமடைந்தார். தாராபுரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் யஷ்வந்த் இறந்தார்.