/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஒயர் திருட்டில் ஈடுபட்ட இருவருக்கு தர்மஅடி
/
ஒயர் திருட்டில் ஈடுபட்ட இருவருக்கு தர்மஅடி
ADDED : ஜூன் 05, 2025 01:32 AM
பவானி, பவானி அருகே ஜம்பையை சேர்ந்தவர் ராஜேந்திரன், 42: இவரது வீட்டின் அருகே, கட்டட வேலை நடந்து வருகிறது. அங்கு இரண்டு லட்சம் ரூபாய் மதிப்பிலான, ஒயர்களை ராஜேந்திரன் வைத்து இருந்தார். இந்நிலையில் நேற்று அதிகாலை, மர்மநபர்கள் இருவர் ஒயர்களை எடுத்துக்கொண்டு ஓட முயன்றனர்.
அந்த வழியாக வாக்கிங் சென்றவர்கள், அப்பகுதி மக்கள் ஆகியோர் இணைந்து, இரவரையும் பிடித்து, தர்ம அடி கொடுத்தனர். பின், அதே இடத்தில் அமரவைத்து விட்டு, பவானி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், இருவரையும் பிடித்து விசாரிக்கையில், சேலம் கிச்சிபாளையத்தை சேர்ந்த பால்ராஜ், 50, சுரேஷ், 32, என்பதும், அவர்கள் ஒயர்களை திருட வந்ததும்
விசாரணையில் தெரியவந்தது.