/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மூதாட்டியிடம் இரண்டு பவுன்; செயின் பறித்த பெண்கள் கைது
/
மூதாட்டியிடம் இரண்டு பவுன்; செயின் பறித்த பெண்கள் கைது
மூதாட்டியிடம் இரண்டு பவுன்; செயின் பறித்த பெண்கள் கைது
மூதாட்டியிடம் இரண்டு பவுன்; செயின் பறித்த பெண்கள் கைது
ADDED : மே 07, 2024 07:16 AM
ஈரோடு : கோவை, போத்தனுார் கார்மல் நகரை சேர்ந்த ஜோசப் மனைவி அருள்மேரி, 67. இவருக்கு உடல்நிலை சரியில்லாததால் கடந்த, 1ல் ஈரோட்டில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற வந்திருந்தார். சிகிச்சை முடிந்து, அன்றைய தினமே மீண்டும் கோவை செல்வதற்காக ஈரோடு பஸ் ஸ்டாண்டிற்கு சென்றார். அங்கு பஸ் ஏற தடுமாறினார். இதை பார்த்த அங்கிருந்த இரு பெண்கள், அருள்மேரியை மீட்டு, அருகில் இருந்த நடைமேடையில் உட்கார வைத்து பதற்றத்தை குறைத்து ஆறுதல் கூறினர்.
இயல்பு நிலைக்கு திரும்பியதும், அருள்மேரி பஸ் ஏறி கோவைக்கு சென்றார். அருள்மேரி வீட்டுக்கு சென்று கழுத்தை கவனித்தபோது, அவர் அணிந்திருந்த 2 பவுன் தங்க செயின் மாயமாகி இருந்தது தெரியவந்தது. ஈரோடு பஸ் ஸ்டாண்டில் உதவிய இரு பெண்கள் திருடியிருக்கலாம் என சந்தேகம் அடைந்து, ஈரோடு டவுன் போலீஸ் ஸ்டேஷனில் அருள்மேரி புகார் அளித்தார்.
ஈரோடு பஸ் ஸ்டாண்டில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அருள்மேரிக்கு உதவியது பி.பெ.அக்ரஹாரம் ஜோசப்தோட்டத்தை சேர்ந்த தாஜ் மனைவி சோபியா, 35, பாபு மனைவி அஜிமா, 55, என்பது தெரியவந்தது. இருவரையும் விசாரித்ததில், 2 பவுன் நகையை திருடியதை ஒப்புக்கொண்டனர். இருவரையும் போலீசார் நேற்று முன்தினம் கைது செய்து நகையை மீட்டனர்.