/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
டூவீலர் மீது சரக்கு வாகனம் மோதி பெண்கள் படுகாயம்
/
டூவீலர் மீது சரக்கு வாகனம் மோதி பெண்கள் படுகாயம்
ADDED : நவ 03, 2024 01:17 AM
டூவீலர் மீது சரக்கு வாகனம்
மோதி பெண்கள் படுகாயம்
சென்ற டூவீலர் மீது, சரக்கு வாகனம் மோதியதில், இரண்டு பெண்கள் படுகாயமடைந்தனர்.
அரவஅரவக்குறிச்சி, நவ. 3-
முன்னாள் க்குறிச்சி அருகே, ராஜபுரம் மேற்கு தெருவை சேர்ந்தவர் மனோகரன் மகள் ஹரிப்பிரியா, 24. இவரும், பாரதியார் நகரை சேர்ந்த ரமேஷ் குமார் மனைவி கவிதா, 37, என்பவரும், ராஜபுரத்தில் இருந்து அரவக்குறிச்சி செல்லும் சாலையில் சென்று கொண்டிருந்தனர். டாஸ்மாக் கடை எதிரே சென்றபோது, இதே திசையில் பின்னால் வந்த டாடா ஏஸ் சரக்கு வாகனம், ஹரிப்பிரியா ஓட்டிச் சென்ற டூவீலர் மீது மோதியது.
இந்த விபத்தில் ஹரிப்பிரியா, பின்னால் அமர்ந்து வந்த கவிதா ஆகிய இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக இருவரையும் மீட்டு, கரூரில் உள்ள அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அரவக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.