/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பு.புளியம்பட்டியில் வங்கி முன் நிறுத்தப்பட்ட டூவீலர் திருட்டு
/
பு.புளியம்பட்டியில் வங்கி முன் நிறுத்தப்பட்ட டூவீலர் திருட்டு
பு.புளியம்பட்டியில் வங்கி முன் நிறுத்தப்பட்ட டூவீலர் திருட்டு
பு.புளியம்பட்டியில் வங்கி முன் நிறுத்தப்பட்ட டூவீலர் திருட்டு
ADDED : டிச 27, 2024 01:04 AM
புன்செய் புளியம்பட்டி, டிச. 27-
புன்செய்புளியம்பட்டி, தாகூர் வீதியைச் சேர்ந்தவர் முத்துசாமி, 52. தனியார் பள்ளி வாட்ச்மேன். நேற்று மதியம், பு.புளியம்பட்டி பவானிசாகர் சாலையில் உள்ள தனியார் வங்கிக்கு முத்துசாமி தனது எக்ஸல் சூப்பர் மொபட்டில் சென்று, வங்கி முன் நிறுத்திவிட்டு வங்கிக்குள் சென்றுள்ளார். பணி முடிந்து வெளியே வந்து பார்த்தபோது, மொபட்டை
காணவில்லை.
புன்செய் புளியம்பட்டி போலீசார், வங்கி முன்புறம் பொருத்தப்பட்டிருந்த 'சிசிடிவி' கேமராவை ஆய்வு செய்து பார்த்தபோது, சாலையில் நடந்து சென்ற நபர் ஒருவர், அக்கம்பக்கம் நோட்டமிட்டு மொபட் மீது அமர்ந்தபடி, அங்குமிங்கும் சுற்றி பார்த்துவிட்டு மொபட்டை வேகமாக தள்ளிச் செல்லும் காட்சி பதிவாகி இருந்தது. இதையடுத்து, 'சிசிடிவி' காட்சிகளின் அடிப்படையில் மொபட்டை திருடி சென்ற நபரை தேடி
வருகின்றனர்.