/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மொபைல் போன் பறித்த இரு வாலிபர்கள் கைது
/
மொபைல் போன் பறித்த இரு வாலிபர்கள் கைது
ADDED : ஆக 28, 2025 01:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு, ஈரோடு, பெரியசேமூரை சேர்ந்த ராஜசேகர் மகன் விட்டல் ராஜ், 23. தனியார் கல்லுாரி மாணவர். கடந்த 25ம் தேதி இரவு 11:30 மணியளவில், ஈரோடு ஈ.வி.என் சாலை ஸ்டோனி பாலம் அருகே அவரது சகோதரி வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த இரு மர்ம
நபர்கள், விட்டல் ராஜிடம் இருந்த ஸ்மார்ட்போனை பறித்து கொண்டு அங்கிருந்து தப்பினர். சூரம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி, மொபைல் போனை பறித்து சென்றது சூரம்பட்டியை சேர்ந்த ரஞ்சித் மகன் ஸ்ரீநாத், 20, பெரியார் நகரை சேர்ந்த முருகன் மகன் வசந்தகுமார், 25, என்பது தெரியவந்தது.இருவரையும் கைது செய்து, நீதிமன்ற உத்தரவுப்படி ஈரோடு கிளை சிறையில் அடைத்தனர்.