/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பெண்ணிடம் நகை பறித்த இரு வாலிபர்கள் கைது
/
பெண்ணிடம் நகை பறித்த இரு வாலிபர்கள் கைது
ADDED : செப் 06, 2025 01:17 AM
ஈரோடு :ஈரோடு, முத்தம்பாளையம் ஹவுசிங் யூனிட் பேஸ்-2ல் வசிப்பவர் ஜெயபிரகாஷ், 45; தே.மு.தி.க., வட்ட செயலாளர். இவரது மனைவி ஜெயசித்தாராணி, 40; இருவரும் டீச்சர்ஸ் காலனியில் டீக்கடை நடத்தி வருகின்றனர். கடந்த மாதம், 22ம் தேதி இரவில், காய்கறி வாங்கிவிட்டு மொபட்டில் வீட்டுக்கு ஜெயசித்தாராணி சென்றார்.
சென்னிமலை சாலை டீசல் செட் அருகே சென்றபோது, பைக்கில் ெஹல்மெட் அணிந்து வந்த இருவர், ஜெயசித்தாராணி கழுத்தில் இருந்த, ஐந்து பவுன் தங்கச்சங்கிலியை பறித்து தப்பினர். சூரம்பட்டி போலீசார் குற்றவாளிகளை தேடிவந்தனர்.
இதில் மதுரை, திருப்பரங்குன்றம் சமத்துவபுரம், பிள்ளையார்பட்டி தெரு பாண்டியன் மகன் அருண்குமார், 28; விருதுநகர், காரியாபட்டி முடுக்கன்குளம் திருமுருகன், 28, ஆகியோர் ஈடுபட்டது தெரிய வந்தது. அருண்குமாரை பழனியிலும், திருமுருகனை விருதுநகர் மாவட்டத்திலும் போலீசார் கைது செய்தனர்.