ADDED : நவ 22, 2026 06:37 AM
அ நிறம் | அளவு
பவானி:சேலம் - கோவை தேசிய நெடுஞ்சாலையில்,
சித்தோடு அருகே செல்லப்பம்பாளையம் பிரிவில், பாலம் கட்டும் பணி
நடக்கிறது. இதேபோல் நசியனுார் அருகே ஆட்டையம்பாளையத்திலும்,
பாலம் கட்டப்படுகிறது. ஆறு மாதமாக நடந்து வருவதால், இரவில் வாகன
விபத்து நடக்கிறது.
பகலில் எந்நேரமும் போக்குவரத்து நெரிசல்
ஏற்பட்டு, வாகனங்கள் அணிவகுத்து நிற்பது தொடர்கதையாக உள்ளது.
பாலம் கட்டும் பணிகளை விரைந்து முடிக்க, வாகன ஓட்டிகள் கோரிக்கை
விடுத்துள்ளனர்.
