sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

மாநகரில் அள்ளப்படாமல் தேங்கும் குப்பை கேள்விக்குறியாகும் பொது சுகாதாரம்

/

மாநகரில் அள்ளப்படாமல் தேங்கும் குப்பை கேள்விக்குறியாகும் பொது சுகாதாரம்

மாநகரில் அள்ளப்படாமல் தேங்கும் குப்பை கேள்விக்குறியாகும் பொது சுகாதாரம்

மாநகரில் அள்ளப்படாமல் தேங்கும் குப்பை கேள்விக்குறியாகும் பொது சுகாதாரம்


ADDED : ஜூன் 09, 2025 04:06 AM

Google News

ADDED : ஜூன் 09, 2025 04:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: மாநகரில் அள்ளப்படாமல் தேங்கும் குப்பையால், பொது சுகா-தாரம் கேள்விக்குறியாகி வருகிறது.

ஈரோடு மாநகராட்சியில் தினமும் துாய்மை பணியாளர்கள் ஒவ்-வொரு வீடு, கடைகள், அலுவலகங்களில் குப்பைகளை சேக-ரித்து மக்கும், மக்காத குப்பைகளை எடுத்து செல்கின்றனர். பொது இடங்களில் குப்பையை கொட்டுவோருக்கு அபராதம் விதிக்கப்படும் என்று மாநகராட்சி எச்சரிக்கை விடுத்து வருகிறது. சில இடங்களில் அபராதமும் விதிக்கிறது. ஆனால் மாநகராட்-சிக்கு உட்பட்ட இடத்தில் மாநகராட்சி நிர்வாகமே குப்பையை வீடு, வீடாக சென்று வாங்காமல் பொது இடத்தில் இன்னமும் குப்பையை கொட்ட வைக்கும் அவலம் தொடர்கிறது.

இதுபற்றி பொதுமக்கள் கூறியதாவது: வெண்டிபாளையம், கோணவாய்க்கால் உள்ளிட்ட பகுதிகளில் பிளாஸ்டிக் குப்பை தொட்டிகளை வைத்துள்ளனர். இதில் அப்பகுதி மக்கள் குப்-பையை கொட்டுகின்றனர். இதை முறையாக துாய்மை பணியா-ளர்கள் அப்புறப்படுத்துவதில்லை. இதனால் குப்பை மலை போல் தேங்கி கிடக்கிறது. தெருநாய்கள் இழுத்து கடித்து, குதறி அசுத்தம் செய்கிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. பொது இடத்தில் குப்பை கொட்ட வைத்தவர்களுக்கு யார் அப-ராதம் விதிப்பது? எனவே இப்பகுதிகளில் குப்பையை தேங்க விடாமல் துாய்மை செய்ய இனி வரும் காலங்களில் நடவடிக்கை எடுக்க மாநகராட்சி நிர்வாகம் முன் வர வேண்டும். இவ்வாறு கூறினர்.






      Dinamalar
      Follow us