ADDED : செப் 21, 2026 06:01 AM
ஈரோடு:ஈரோடு தீயணைப்பு நிலையத்தை தரம் உயர்த்தி, வீரர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க, கோரிக்கை எழுந்துள்ளது.
ஈரோடு
தீயணைப்பு நிலையம், 1944ல் தோற்றுவிக்கப்பட்டது. தற்போது
மாநகரின் வளர்ச்சி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மக்கள் தொகை
மட்டுமின்றி தொழில்கள், வாகனங்கள் உள்ளிட்டவற்றின் எண்ணிக்கையும்
பலமடங்காகி வருகிறது. ஆனால் ஈரோடு தீயணைப்பு துறையில் அதற்கேற்பு
தீயணைப்பு வீரர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவில்லை. இதனால் தீ
விபத்து, மீட்பு பணிக்கு வீரர்கள் செல்வதில் நிர்வாக ரீதியாக இடர்பாடு
ஏற்படுகிறது. எனவே தீயணைப்பு நிலையத்தை தரம் உயர்த்தி, வீரர்களின்
எண்ணிக்கையை அதிகரிக்க எதிர்பார்ப்பு மேலோங்கி உள்ளது.
இதுபற்றி
தீயணைப்பு வீரர்கள் கூறியதாவது: ஈரோடு தீயணைப்பு நிலையத்தில், 39
தீயணைப்பு வீரர்கள் பணியாற்றிய நிலையில், சில ஆண்டுக்கு முன், 36 ஆக
வீரர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம் பழனி
தீயணைப்பு நிலையம் சில ஆண்டுக்கு முன் தரம் உயர்த்தப்பட்டது.
அப்போதே ஈரோட்டையும் தரம் உயர்த்தியிருக்க வேண்டும். ஏனோ
நடக்கவில்லை. தரம் உயர்த்த தேவையான அனைத்து அம்சங்களும் இங்குள்ளன.
எட்டு தீயணைப்பு வாகனங்கள் உள்ளன. ஆனால், 36 வீரர்கள் மட்டுமே
உள்ளனர்.
இவர்களே மாறி, மாறி பணிக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது.
தொடர் அழைப்புகளின் போது நிர்வாக இடர்பாடு ஏற்படுகிறது.
உயரதிகாரிகள் தீயணைப்பு நிலையத்தை தரம் உயர்த்தி, வீரர்களின்
எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுப்பதில்லை. புதிய அரசாவது
தரம் உயர்த்த வேண்டும். இவ்வாறு கூறினர்.
