/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
துாய்மை தொழிலாளர் 110 பேருக்கு சீருடை
/
துாய்மை தொழிலாளர் 110 பேருக்கு சீருடை
ADDED : அக் 23, 2024 01:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
துாய்மை தொழிலாளர்
110 பேருக்கு சீருடை
காங்கேயம், அக். 23-
வெள்ளகோவில் நகராட்சியில் பணிபுரியும் துாய்மை தொழிலாளர்களுக்கு, நகராட்சி சார்பில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சீருடை வழங்கப்படும்.
இதன்படி நிரந்தர மற்றும் ஒப்பந்த துாய்மை தொழிலாளர்கள், துப்புரவு பணி மேற்பார்வையாளர், ஓட்டுனர், இரவு காவலர் மற்றும் அலுவலக பணியாளர் என, 110 பேருக்கு புதிய சீருடைகளை நகராட்சி தலைவர் கனியரசி முத்துக்குமார், கமிஷனர் வெங்கடேஸ்வரன் வழங்கினர். நகராட்சி துப்புரவு ஆய்வாளர் செல்வராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.