/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
சினிமா தியேட்டரை நா.த.க.,வினர் முற்றுகை
/
சினிமா தியேட்டரை நா.த.க.,வினர் முற்றுகை
ADDED : ஆக 06, 2025 01:01 AM
ஈரோடு, இலங்கை தமிழர்களை கொச்சைப்படுத்தும் விதமாக, கிங்டம் திரைப்படம் உள்ளதாக கூறி, நாம் தமிழர் கட்சியினர், ஈரோடு-மேட்டூர் சாலையில், அந்த திரைப்படம் ஓடும் தியேட்டரை, கிழக்கு சட்டசபை தொகுதி தலைவர் சரவணன் தலைமையில், பெண்கள் உள்ளிட்ட, 15 பேர் முற்றுகையிட்டனர். தொடர்ந்து திரைப்படத்தை திரையிடக்கூடாது என்று வலியுறுத்தி, தியேட்டர் மேலாளரிடம் மனு கொடுத்தனர். முன்னதாக வீரப்பன்சத்திரம் போலீசார் தியேட்டர் முன் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். முற்றுகையை ஐந்து நிமிடங்களில் முடித்து கொண்டனர்.
* அந்தியூர் தவிட்டுப்பாளையத்தில் கிங்டம் திரைப்படம் ஓடும் தியேட்டருக்கு, நாதக தகவல் தொழில்நுட்ப பிரிவு ஒருங்கிணைப்பாளர் சரவணன் தலைமையில் நேற்று சென்றனர். படத்தை ஒளிபரப்பக்கூடாது எனக்கூறி மனு அளித்தனர். தியேட்டர் நிர்வாகம் படக்காட்சிகளை ரத்து செய்வதாக கூறியதால் திரும்பி சென்றனர். அந்தியூர் போலீசிலும் புகார் அளித்தனர்.