/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
திட்டமிடாத பாதாள சாக்கடை சீரமைப்பு மாநகரில் கடும் போக்குவரத்து நெரிசல்

ADDED : ஜூன் 22, 2025 01:03 AM
ஈரோடு, ஈரோடு, பெருந்துறை சாலை வழியாக வரும் வாகனங்கள் அகில்மேடு வீதி வழியாக பஸ் ஸ்டாண்டுக்குள் செல்லும். பஸ் ஸ்டாண்டுக்குள் நுழையும் பகுதியில் பூக்கடை பகுதியில் பாதாள சாக்கடை அடைப்பு, குழாய் உடைப்பு போன்றவற்றை, நேற்று காலை திடீரென மாநகராட்சி தொழில் நுட்ப பிரிவினர் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
திடீரென பணியை தொடங்கியதால் அகில்மேடு வீதி வழியாக வரும் வாகனங்கள் அனைத்தும் மேட்டூர் சாலை, சுவஸ்திக் கார்னர் ரவுண்டானா சுற்றி சத்தி சாலை வழியாக சென்று, மூலப்பட்டறை சாலை இணையும் பகுதி வழியாக பஸ் ஸ்டாண்ட்டுக்குள் திருப்பி விட்டுள்ளனர்.
அச்சாலை முழுவதும் ஆக்கிரமிப்பு அதிகம் உள்ளதால், ஒரு பஸ் மட்டுமே செல்லும் அளவுக்கு சாலை உள்ளது. இதனால் காலை முதல் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. மேட்டூர் சாலையில், அரசன் கண் மருத்துவமனை செல்லும் சாலை அருகே பேரிகார்டை நகர்த்தி ஒரு நாள் மட்டும் பஸ் ஸ்டாண்டுக்குள் பஸ்களை திருப்பி விட்டிருந்தால் கூட்ட நெரிசல் குறைந்திருக்கும்.
அவ்வாறும் செய்யாமல், சத்தி சாலை வழியாக திருப்பி விட்டதால், மேட்டூர் சாலை, சத்தி சாலை, மார்க்கெட் செல்லும் பகுதி, வீரப்பன்சத்திரம் சாலை என அனைத்து இடங்களில் மக்கள் சிரமப்பட்டனர்.