சீரமைக்கப்படாத சாலை, பாலம் :ஆர்ப்பாட்டத்தால் பணி துவக்கம்
சீரமைக்கப்படாத சாலை, பாலம் :ஆர்ப்பாட்டத்தால் பணி துவக்கம்
UPDATED : நவ 11, 2026 10:12 PM
ADDED : நவ 11, 2026 07:29 AM

ஈரோடு:ஈரோடு
- கரூர் சாலை நான்கு வழிச்சாலையாக மாற்றும் பணியும், சில இடங்களில்
சாலை விரிவாக்கம், புதிய பாலம் அமைக்கும் பணி கடந்த பிப்., மாதம்
துவங்கியது.
ஆனால் சில வாரத்தில் பணியை கிடப்பில் போட்டனர். இதில்
சோளங்காபாளையம் முதல் மலையம்பாளையம் வரையிலான இடத்துக்குள், ஏழு
புதிய பாலம் கட்ட சாலையில் முக்கால் அளவுக்கு குழி தோண்டி, பாதி அளவு
பாலம் கட்டி, இரு புறமும் சாலையில் வாகனங்கள் செல்ல முடியாத அளவு
மோசமாக மண், கல்லை குவித்து வைத்துள்ளனர்.
பல இடங்களில் மழை
மற்றும் வாகனங்களால் பெரிய அளவில் குழி ஏற்பட்டு, அவற்றையும்
சீரமைக்காமல் வைத்துள்ளனர். இதனால் கடந்த ஏழு மாதங்களில் விபத்தில், 7
பேர் இறந்துள்ளனர். பலர் படுகாயம் அடைந்துள்ளனர். இதுபற்றி ஈரோடு
கலெக்டர் முதல் முதல்வர் வரை பல முறை மனு அனுப்பியும் நடவடிக்கை
இல்லாததால், கருமாண்டாம்பாளையம் பஸ் ஸ்டாப்பில் நேற்று ஆர்ப்பாட்டம்
செய்தனர். வெள்ளோட்டம்பரப்பு டவுன் பஞ்., முன்னாள் தலைவர்
செந்தில்குமார் தலைமையில் வெள்ளோட்டம்பரப்பு, முள்ளாம்பரப்பு,
கிளாம்பாடி உட்பட பல்வேறு கிராம மக்கள் பங்கேற்றனர்.
இதையறிந்து
பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் சென்று
பேச்சுவார்த்தை நடத்தினர். உடனடியாக பணிகளை துவங்குவதாகவும்,
முதற்கட்டமாக சாலையில் உள்ள குழிகளை செப்பனிட்டும், பாலம் அமைக்கும்
இடத்தில் உள்ள மண் குவியலை அகற்றுவதாக கூறி பணியையும் தொடங்கினர்.
இதை தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தை மக்கள் கைவிட்டனர்.
