/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
இ.பி.எஸ்., வரவேற்பு பேனர்கள் கிழிப்பால் அந்தியூரில் பரபரப்பு
/
இ.பி.எஸ்., வரவேற்பு பேனர்கள் கிழிப்பால் அந்தியூரில் பரபரப்பு
இ.பி.எஸ்., வரவேற்பு பேனர்கள் கிழிப்பால் அந்தியூரில் பரபரப்பு
இ.பி.எஸ்., வரவேற்பு பேனர்கள் கிழிப்பால் அந்தியூரில் பரபரப்பு
ADDED : மார் 08, 2026 08:01 AM

அந்தியூர்:அந்தியூர்
அருகே கந்தாம்பாளையத்தில், அ.தி.மு.க., சார்பில், மக்-களை காப்போம்;
தமிழகத்தை மீட்போம் பரப்புரை நிகழ்ச்சி நேற்று நடந்தது.
இதில் கலந்து
கொள்ளும் இ.பி.எஸ்.,சை வர-வேற்று, ஆப்பக்கூடல் சக்தி நகரிலிருந்து
கீழ்வாணி, கைகாட்டி, தோப்பூர், புதுமேட்டூர், தவிட்டுப்பாளையம்,
அந்தியூர் ரவுண்-டானா, கந்தாம்பாளையம் வரை, அ.தி.மு.க.,வினர் பிளக்ஸ்
பேனர் வைத்தனர். முன்னாள் எம்.எல்.ஏ., ராஜாகிருஷ்ணன் தரப்பில்,
நுாற்றுக்கும் மேற்பட்ட பிளக்ஸ் பேனர்களும், சுப்ரீம் கோர்ட் வக்கீல்
சுப்பிரமணியம் தரப்பில், 260 பேனர்கள் என, 500க்கும் மேற்பட்ட
பேனர்கள், சாலையின் இரு மருங்கிலும் வைக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில்
நேற்று முன்தினம் நள்ளிரவில், கீழ்வாணியிலி-ருந்து கைகாட்டி,
கரட்டூர் மேடு வரை வைக்கப்பட்டிருந்த, 45க்கும் மேற்பட்ட வரவேற்பு
பேனர் கிழிக்கப்பட்டன. இதில் வக்கீல் சுப்பிரமணியம் தரப்பில் வைத்த,
33 பிளக்ஸ் பேனர், முன்னாள் எம்.எல்.ஏ., ராஜாகிருஷ்ணன் வைத்த ஐந்து
பேனர்கள் மர்ம ஆசாமிகள் கிழிக்கப்பட்டிருந்தன.
இதுகுறித்த
புகாரின்படி அந்தியூர் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், நேரில் சென்று
நேற்று காலை விசாரித்தார். கிழிக்கப்பட்ட பேனர்களுக்கு பதிலாக, வேறு
பேனர் தயாரித்து வைத்தனர். இந்த சம்பவம் அ.தி.மு.க.,வினர் மத்தியில்
அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

