/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
காவிரி, பவானி ஆறுகளின் உபரிநீர் சேமிப்பு திட்டங்களை நிறைவேற்ற வலியுறுத்தல்

ADDED : செப் 26, 2024 02:35 AM
பவானி: -காவிரி மற்றும் பவானி ஆறுகளின் உபரி நீரை ஏரி, குளங்களில் சேமிக்கும் திட்டங்களை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என, அந்தியூரில் நடந்த கலந்தாய்வு கூட்டத்தில் விவசாயிகள் வலியு-றுத்தினர்.திருப்பூர் எம்.பி., சுப்பராயன், முன்னாள் எம்.பி., கோவிந்-தராஜர், முன்னாள் எம்.எல்.ஏ., குருசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அந்தியூர் எம்.எல்.ஏ., வெங்கடாச்சலம் தலைமை வகித்தார். கூட்டத்தில் ஈரோடு, சேலம் மாவட்டங்களில் அந்தியூர், அம்மாபேட்டை, பவானி, கொளத்துார் பகுதிகளில் உள்ள ஏரி, குளம், குட்டைகளை, பவானி, காவிரி ஆறுகளின் உபரிநீரை நிரப்பி சேமிக்கும் திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. பர்கூர் மலைப்பகுதியில் தோனிமடுவு திட்டம், டி.என்.பாளையம் மலைப்பகுதியில் இருந்து வரும் காட்-டாற்று வெள்ளநீரை
சேமிக்கும் வேதபாறை அணைத்திட்டம் குறித்து கூட்டத்தில் விளக்கப்பட்டது.அந்தியூர், அம்மாபேட்டை, பவானி, டி.என். பாளையம், கொளத்துார் பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் கருத்துகளை தெரி-வித்தனர். காங்கிரஸ் மாவட்ட தலைவர் சரவணன், தி.மு.க., பொதுக்குழு
உறுப்பினர் மாதேஸ்வரன், அந்தியூர் பேரூராட்சி தலைவர் பாண்டியம்மாள், துணைத் தலைவர் பழனிசாமி, தொழில்நுட்ப மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர் நாகராஜ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.