/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஜி.எச்.,களில் நிரந்தர பணியாளர்களை நியமிக்க அமைச்சரிடம் வலியுறுத்தல்
/
ஜி.எச்.,களில் நிரந்தர பணியாளர்களை நியமிக்க அமைச்சரிடம் வலியுறுத்தல்
ஜி.எச்.,களில் நிரந்தர பணியாளர்களை நியமிக்க அமைச்சரிடம் வலியுறுத்தல்
ஜி.எச்.,களில் நிரந்தர பணியாளர்களை நியமிக்க அமைச்சரிடம் வலியுறுத்தல்
ADDED : ஜூன் 08, 2025 01:03 AM
ஈரோடு, ஈரோட்டில், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியனிடம், ஈரோடு மாவட்ட மருத்துவத்துறை பணியாளர் சங்கம் - ஏ.ஐ.டி.யு.சி., மாநில தலைவர் சின்னசாமி தலைமையில் வழங்கிய மனுவில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் செயல்படும் அரசு மருத்துவ கல்லுாரிகள், அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை, அரசு மருத்துவமனை உட்பட, 200க்கும் மேற்பட்ட இடங்களில், துாய்மை, பராமரிப்பு, பாதுகாவல் பணிகளில், 30,000க்கும் மேற்பட்ட அவுட் சோர்சிங் முறையில் ஒப்பந்த பணியாளர்கள் பல ஆண்டுகளாக தினக்கூலிகளாக பணி செய்கின்றனர்.
குறைந்தபட்ச கூலிக்கு கடினமாக வேலை செய்கின்றனர். கடந்த, 2021ல் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும், ஒப்பந்த தொழிலாளர் முறை ஒழிக்கப்பட்டு, பணி நிரந்தரம் செய்யப்படுவர் என நம்பிக்கை ஏற்படுத்தினர். அரசே நேரடியாக பணியாளர்களை நியமிக்கும் என்றனர். ஆனாலும், இதுவரை ஒப்பந்த அடிப்படையே தொடர்கிறது.
இவர்களுக்கு குறைந்தபட்ச ஊதிய சட்டப்படி, ஊதியம் வழங்க வேண்டும். பி.எப்., - இ.எஸ்.ஐ., பிடித்தம் செய்த பயன்களை வழங்க வேண்டும். அந்தந்த மருத்துவமனை தேவைக்கு ஏற்ப, 100 சதவீத பணியாளர்களை நியமித்து பணி வழங்க வேண்டும். குறிப்பிட்ட இடங்களுக்கு நியமிக்கப்பட்ட பணியாளர்களை, பிற மருத்துவமனைகளுக்கும், தனி நபர் பணிகளுக்கு அனுப்பக்கூடாது. இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.