/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
வணிக வரி செலுத்துவோர்' கூட்டம் நடத்த வலியுறுத்தல்
/
வணிக வரி செலுத்துவோர்' கூட்டம் நடத்த வலியுறுத்தல்
ADDED : டிச 11, 2024 01:18 AM
வணிக வரி செலுத்துவோர்' கூட்டம் நடத்த வலியுறுத்தல்
ஈரோடு, டிச. 11-
ஈரோடு மாவட்ட அனைத்து தொழில் வணிக சங்கங்களின் கூட்டமைப்பு செயற்குழு கூட்டம் தலைவர் ராஜமாணிக்கம் தலைமையில் நடந்தது.
ஈரோடு கூட்ஸ் டிரான்ஸ்போர்ட் லாரி ஓனர்ஸ் அசோசியேசன் தலைவர் செந்தில்ராஜா வரவேற்றார். பல்வேறு அமைப்புகளை சேர்ந்த பெரியசாமி, முருகானந்தம், ஆடிட்டர் கிருஷ்ணசாமி பேசினர். ஈரோடு மாவட்டத்தில் வணிக வரி செலுத்துவோர் கூட்டம், வணிக வரித்துறை மூலம் கடந்த ஓராண்டாக கூட்டப்படவில்லை. தற்போது கட்டட வாடகை மீதான ஜி.எஸ்.டி., 18 சதவீதம், துணிக்கு, 28 சதவீதம் என உயர்ந்துள்ளதால், வணிகர்களின் கருத்துக்களை கேட்டு, அரசுக்கு பரிந்துரைக்க வேண்டும்.
ஈரோடு ஐ.ஆர்.டி.டி., அருகே, 'நியோ ஐ.டி., பார்க்' அமைப்பதாக அரசு அறிவித்தது. அறிவிப்புக்கு பின் செயல்பாடு இல்லை. விரைவாக நிதி ஒதுக்கீடு செய்து, ஐ.டி., பார்க்கை செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.
கொடுமுடி வணிக வரித்துறை வட்டார அலுவலகம், கரூர் மாவட்டத்தில் உள்ளது.
கொடுமுடி வட்டாரம் என்பது, ஈரோடு நாடார்மேட்டில் இருந்து துவங்குவதால், ஈரோடு ஆணைக்கல்பாளையத்தில் உள்ள தலைமை அலுவலகத்துக்கு மாற்ற வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பொது செயலாளர் ரவிசந்திரன் நன்றி கூறினார்.

