ADDED : அக் 31, 2026 06:44 AM
ஈரோடு:காளிங்கராயன்
மதகு பாசன விவசாயிகள் சபை எண்-4 தலைவர் பழனிகுமார், ஈரோடு கலெக்டர்,
நீர் வளத்துறை கண்காணிப்பு பொறியாளர், செயற்பொறியாளர்களுக்கு
வழங்கிய கடிதத்தில் கூறியதாவது:
காளிங்கராயன் கால்வாய்
பாசனத்தில், பயிர்களை காப்பாற்ற பாசனத்துக்கு தண்ணீர் திறக்க, சென்னை
உயர்நீதிமன்றத்தில் காளிங்கராயன் கால்வாய் பாசன விவசாயிகள்
சார்பில் வழக்கு தொடுக்கப்பட்டது. தண்ணீர் திறப்பு குறித்து இரு
வாரங்களுக்குள் உத்தரவு பிறப்பிக்க கடந்த, 15ல் தீர்ப்பு வழங்கியது.
இதை தொடர்ந்து, 22ல் டி.ஆர்.ஓ., சாந்தகுமார் தலைமையில்,
காளிங்கராயன் கால்வாய், கொடிவேரி பாசன கால்வாய்கள், கீழ்பவானி திட்ட
கால்வாய் விவசாயிகளிடம் கருத்து சேகரிக்கப்பட்டது. ஆனால் இதுவரை
நீர் வளத்துறை உத்தரவு ஏதும் பிறப்பிக்கவில்லை. காளிங்கராயன்
வாய்க்காலில் பயிர்களை காப்பாற்ற ஏப்.,30 வரை தண்ணீர் திறக்க
நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
