/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
செப்., 30 வரை பசுக்களுக்கு தோல் கழலை நோய் தடுப்பூசி
/
செப்., 30 வரை பசுக்களுக்கு தோல் கழலை நோய் தடுப்பூசி
செப்., 30 வரை பசுக்களுக்கு தோல் கழலை நோய் தடுப்பூசி
செப்., 30 வரை பசுக்களுக்கு தோல் கழலை நோய் தடுப்பூசி
ADDED : செப் 06, 2025 01:42 AM
கரூர், :பசுக்களுக்கு இலவசமாக தோல் கழலை நோய் தடுப்பூசி செலுத்தும் பணி வரும், 30 வரை நடக்கிறது என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.அவர், வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கரூர் மாவட்டத்தில், கால்நடை பராமரிப்பு துறை மூலம் வரும், 30 வரை பசுக்களுக்கு இலவசமாக தோல் கழலை நோய் தடுப்பூசி முகாம் நடக்கிறது. தோல் கழலை நோயானது வைரஸ் நச்சு உயிரினால் ஏற்படும் அம்மை வகையை சேர்ந்தது. இந்நோய் கொசு, ஈ, உண்ணி கடி மற்றும் பாதிக்கப்பட்ட மாடு மூலமாக பரவுகிறது. கன்று குட்டிகள் பாதிக்கப்பட்ட மாட்டின் பாலை அருந்தும் போது இந்நோய் ஏற்படுகிறது.
நோயினால் மாடுகளின் பால் உற்பத்தி குறைதல், சினை பிடிப்பதில் பாதிப்பு, காயங்களால் மாட்டின் தோல் முற்றிலும் பாதிப்படைதல், கருச்சிதைவு மற்றும் மடி நோய் போன்ற பாதிப்புகள் ஏற்படும். மாவட்டத்தில், கால்நடை நிலையங்களில் எல்லைக்குட்பட்ட கிராமங்களில், 75 குழுக்கள் மூலம், 4 மாத வயதுக்கு மேற்பட்ட அனைத்து பசுவினங்களுக்கு தடுப்பூசி பணி மேற்கொள்ளப்படும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.