/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கபாலீஸ்வரர் கோவிலில் வைகாசி விழா துவக்கம்
/
கபாலீஸ்வரர் கோவிலில் வைகாசி விழா துவக்கம்
ADDED : மே 30, 2025 01:02 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு ஈரோடு ஆருத்ர கபாலீஸ்வரர் கோவிலிலர், வைகாசி விசாக தேர் திருவிழா கிராம சாந்தியுடன் நேற்று துவங்கியது. இன்று காலை கணபதி ஹோமம் நடக்கிறது. நாளை காலை கொடியேற்றம் நடக்கிறது.
ஜூன் 1ல் சூரிய பிரபை, சந்திர பிரபை, 2ல் பூத வாகனம், சிம்ம வாகன உற்சவம், 3ல் நாக வாகன உற்சவம் நடக்கிறது. 6ல் தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடக்கிறது. 9ல் வைகாசி விசாக தீர்த்த வாரியை தொடர்ந்து திருக்கல்யாணம், பஞ்ச மூர்த்தி புறப்பாடு நடக்கிறது. 10ல் சண்டிகேஸ்வர பூஜை, பைரவர் யாகம் நடக்கிறது. விழா நாட்களில் காலை, மாலையில் யாகசாலை பூஜை நடக்கிறது.