/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஈரோடு ஆருத்ர கபாலீஸ்வரர் கோவிலில் வைகாசி விசாக தேரோட்டம்
/
ஈரோடு ஆருத்ர கபாலீஸ்வரர் கோவிலில் வைகாசி விசாக தேரோட்டம்
ஈரோடு ஆருத்ர கபாலீஸ்வரர் கோவிலில் வைகாசி விசாக தேரோட்டம்
ஈரோடு ஆருத்ர கபாலீஸ்வரர் கோவிலில் வைகாசி விசாக தேரோட்டம்
ADDED : மே 20, 2024 01:57 AM
ஈரோடு: ஈரோடு, ஆருத்ர கபாலீஸ்வரர் கோவிலில் வைகாசி விசாக தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து வழிபட்டனர்.
ஈரோடு கோட்டை பகுதியில், பிரசித்தி பெற்ற ஆருத்ர கபாலீஸ்வரர் கோவில் உள்ளது. நடப்பாண்டு வைகாசி விசாக தேர்த்திருவிழா கடந்த, 11ம் தேதி கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. 13ல் விருஷப யாகம், நந்தி பகவானுக்கு அபிஷேகம் நடந்தது. பின் கோவில் கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது.
விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நேற்று நடந்தது. இதில் வருணாம்பிகை உடனமர் சோமாஸ்கந்தர் அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளினார். தேரோட்டத்தை மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் எல்லப்பாளையம் சிவக்குமார், மாநகராட்சி துணை மேயர் செல்வராஜ் ஆகியோர் வடம் பிடித்து இழுத்து துவக்கி வைத்தனர். தொடர்ந்து, திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து வழிபட்டனர்.
கோவிலில் இருந்து துவங்கிய தேரோட்டம் ஈஸ்வரன் கோவில் வீதி, மணிக்கூண்டு, பன்னீர்செல்வம் பூங்கா, காமராஜ் வீதி வழியாக சென்றது. இந்த தேருடன் வருணாம்பிகை அம்பாள், விநாயகர், வள்ளி, -தெய்வானை சமேத முருகன், சண்டிகேஸ்வரர் ஆகிய சாமிகளின் சப்பரங்களும் உடன் சென்றது. பின்னர் தேர் மீண்டும் மாலையில் கோவில் நிலை வந்தடைந்தது.
வரும், 21ம் தேதி மாலை 5:30 மணிக்கு சிவகாமி அம்பிகா சமேத நடராஜருக்கு சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது. 22 மாலை, 5:00 மணிக்கு வருணாம்பிகை சமேத ஆருத்ர கபாலீஸ்வரருக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெற உள்ளது.

