/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
வள்ளுவர் புகைப்பட கண்காட்சி திறப்பு
/
வள்ளுவர் புகைப்பட கண்காட்சி திறப்பு
ADDED : டிச 24, 2024 02:11 AM
ஈரோடு, டிச. 24--
கன்னியாகுமரி கடலில், 133 அடி உயர திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டு, 25ம் ஆண்டு விழாவை முன்னிட்டு, ஈரோடு சம்பத் நகரில், மாவட்ட நுாலக ஆணைக்குழு சார்பில் டிஜிட்டல் லைப்ரரியில் திருக்குறள் புகைப்பட கண்காட்சி, திருவள்ளுவர் உருவப்படத்துக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் ராஜகோபால் சுன்கரா கண்காட்சியை திறந்து வைத்தார். வரும், 31 வரை நடக்கிறது.
இதையொட்டி 9 மற்றும் 10ம் வகுப்பு மாணவ, மாணவியருக்கு பேச்சுப்போட்டி, 6 முதல், 8 ம் வகுப்பு வரை திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி, பிளஸ் 1, பிளஸ் 2வுக்கு வினாடி - வினா போட்டி நடக்கிறது. 27ல் ஒன்றிய அளவில் முதலிடம் பெறும் மாணவ, மாணவியருக்கு இறுதிப்போட்டி, 28ல் கருத்துரை, 31ல் போட்டியில் வென்றோருக்கு பரிசளிப்பு விழாவும் நடக்க உள்ளது. முதல் மூன்று பரிசுகள் முறையே, 5,000, 3,000, 2,000 ரூபாயும், பங்கேற்ற அனைவருக்கும் பரிசும் வழங்கப்படும். மாவட்ட நுாலக அதிகாரி யுவராஜ், நுால் இருப்பு சரி பார்ப்பு அலுவலர் ரவிசந்திரன் உட்பட பலர் பங்கேற்றனர்.