/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
குருநாத சுவாமி கோவிலில் இன்று முதல் வன பூஜை
/
குருநாத சுவாமி கோவிலில் இன்று முதல் வன பூஜை
ADDED : ஆக 06, 2025 12:54 AM
அந்தியூர், அந்தியூர் குருநாதசுவாமி கோவிலில் நடப்பாண்டு ஆடி மாத தேர்த்திருவிழா கடந்த மாதம், 23ல் பூச்சாட்டுதலுடன் துவங்கியது. 30ல் கொடியேற்றம் நடந்து, நாள்தோறும் குருநாதசுவாமிகு சிறப்பு பூஜை, அலங்காரம் நடந்து வருகிறது. முதல் வன பூஜை இன்று காலை, 9:30 மணிக்கு நடக்கிறது. இதற்காக புதுப்பாளையம் மடப்பள்ளியிலிருந்து காமாட்சியம்மன், பெருமாள், குருநாதசுவாமி சப்பர தேரில், ௩ கி.மீ., துாரத்திலுள்ள வன கோவிலுக்கு பக்தர்கள் தோளில் சுமந்து செல்வர். இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொள்வர். இந்நிலையில் பவானி கூடுதுறையிலிருந்து, 50க்கும் மேற்பட்ட பக்தர்கள், நேற்று தீர்த்தம் கொண்டு வந்து, குருநாதசுவாமிக்கு அபிஷேகம் செய்து வழிபட்டனர்.
கலெக்டர் ஆய்வு
அந்தியூர் குருநாதசுவாமி கோவிலில் நடந்து வரும், விழா தொடர்பான பணிகளை, கலெக்டர் கந்தசாமி நேற்று ஆய்வு மேற்கொண்டார்.
குதிரை மற்றும் மாட்டுச்சந்தை, மடப்பள்ளி, வனக்கோவில் வளாகம், பொழுதுபோக்கு பகுதி, புறக்காவல் நிலையம் உட்பட பல்வேறு இடங்களில் ஆய்வு நடத்தி, சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் விபரம் கேட்டறிந்தார். அந்தியூர் எம்.எல்.ஏ., வெங்கடாசலம், கோபி சப்-கலெக்டர் சிவானந்தம் உடனிருந்தனர்.
இதை தொடர்ந்து அந்தியூரில் அரசு மருத்துவமனை வளாகத்தில் கூடுதல் கட்டடப்பணி, அம்ரூத் திட்டப்பணிகளை பார்வையிட்டார். செம்புளிச்சாம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் மதிய உணவை ருசித்து, பதிவேடுகளை ஆய்வு செய்தார்.