/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
வி.ஏ.ஓ.,க்கள் காத்திருப்பு போராட்டம்
/
வி.ஏ.ஓ.,க்கள் காத்திருப்பு போராட்டம்
ADDED : ஜன 31, 2026 06:49 AM
ஈரோடு; தமிழ்நாடு கிராம நிருவாக அலுவலர் சங்கம் சார்பில், தொடர் காத்திருப்பு போராட்டத்தை, ஈரோடு தாலுகா அலுவலக வளாகத்தில் நேற்று துவக்கினர். வட்ட தலைவர் பழனிவேல் தலைமை வகித்தார். மாவட்ட செயலர் ஜான், வட்ட செயலர் பாலு பேசினர்.
கிராம நிர்வாக அலுவலகங்களில் கழிப்பறை, குடிநீர், இணைய வசதியுடன் கூடிய நவீன மய-மாக்கம் செய்யப்பட்ட அலுவலகமாக அமைத்து தர வேண்டும். கிராம நிர்வாக அலுவலர்களின் டி.என்.பி.எஸ்.சி., நேரடி நியமன முறையில் கல்-வித்தகுதியை பட்ட படிப்பு என மாற்றி அமைக்க வேண்டும்.
வி.ஏ.ஓ.,க்களில், 10 ஆண்டு பணி முடித்தவர்க-ளுக்கு தேர்வு நிலை வி.ஏ.ஓ., என்றும், 20 ஆண்டு பணி முடித்த வி.ஏ.ஓ.,க்களை சிறப்பு நிலை வி.ஏ.ஓ., என பெயர் மாற்றம் செய்து அரசாணை வெளியிட வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.இதேபோல் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவ-லர்கள் சங்கம் சார்பில், கோபி தாலுகா அலுவல-கத்தில் கடந்த, 28ம் தேதி முதல் காத்திருப்பு போராட்டம் நடக்கிறது. மூன்றாம் நாளாக நேற்றும் வட்டத்தலைவர் ஜெயந்தன், வட்ட துணை தலைவர் நடராஜ், வட்ட செயலாளர் சர-வணக்குமார் உள்ளிட்ட, 54 பேர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். நம்பியூர் தாலுகா அலுவலகத்தில் நம்பியூர் வட்ட தலைவர் சுமதி தலைமையில் காத்திருப்பு போராட்டம் நேற்று நடந்தது.

