sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

மாநகரில் பல்வேறு இடங்களில் இரவில் மின்தடையால் அவதி

/

மாநகரில் பல்வேறு இடங்களில் இரவில் மின்தடையால் அவதி

மாநகரில் பல்வேறு இடங்களில் இரவில் மின்தடையால் அவதி

மாநகரில் பல்வேறு இடங்களில் இரவில் மின்தடையால் அவதி


ADDED : நவ 02, 2024 01:04 AM

Google News

ADDED : நவ 02, 2024 01:04 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு, நவ. 2-

ஈரோடு மாநகர பகுதியில் நேற்று முன்தினம் இரவில் பல இடங்களில், 2 மணி நேரத்துக்கு மேல் மின்தடை நீடித்தது.

நேற்று முன்தினம் தீபாவளி பண்டிகையை பொதுமக்கள் கொண்டாடிய நிலையில் ஈரோடு, நாராயணவலசு, நசியனுார் சாலை உட்பட பல்வேறு பகுதியில் மதியம், 2, 3 முறை மின்தடை ஏற்பட்டு தலா, 30 நிமிடங்களுக்கு பின் மின் விநியோகம் தொடர்ந்தது.

இரவு, 9:00 மணி முதல் லேசான மழை பெய்ததுடன், சில இடங்களில் காற்று, மின்னல், இடியும் இருந்தது. அப்போதும், இரவு, 11:00 மணி முதல் நாராயணவலசு மின் பகிர்மான பகுதிக்கு உட்பட்ட குமலன்குட்டை, முருகேசன் நகர், கணபதி நகர், வெட்டுக்காட்டு வலச, போஸ்டல் நகர், நசியனுார் சாலையில் பல பகுதிகளில் மின்தடை ஏற்பட்டது. 1 மணி நேரத்தில் மின் விநியோகம் சீரானது. பின் அதிகாலை, 2:00 மணிக்கு மேல் மீண்டும் மின்தடை ஏற்பட்டு, 2 மணி நேரத்துக்கு பின் சீரானது. மின்வாரிய பொறியாளர்கள் கூறுகையில், 'மின் பாதையில் இன்சுலேட்டர் பழுதானதால் மின்தடை ஏற்பட்டது' என்றனர்.






      Dinamalar
      Follow us