/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மாநகராட்சியில் ரூ.3.67 கோடியில் பல்வேறு திட்டப்பணிகள் துவக்கம்
/
மாநகராட்சியில் ரூ.3.67 கோடியில் பல்வேறு திட்டப்பணிகள் துவக்கம்
மாநகராட்சியில் ரூ.3.67 கோடியில் பல்வேறு திட்டப்பணிகள் துவக்கம்
மாநகராட்சியில் ரூ.3.67 கோடியில் பல்வேறு திட்டப்பணிகள் துவக்கம்
ADDED : செப் 05, 2025 01:06 AM
ஈரோடு, ஈரோடு மாநகராட்சி முதலாவது வார்டு நீதித்துறை காலனியில், கிழக்கு எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு திட்டத்தில், 10 லட்சம் ரூபாய் மதிப்பில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணியை, வீட்டுவசதித்துறை அமைச்சர் முத்துசாமி, பூஜை செய்து நேற்று தொடங்கி
வைத்தார்.
இதேபோல் இரண்டாவது வார்டு ராஜீவ்நகர், 3வது வார்டு மதேஸ்வரன் நகரில் தலா, 13 லட்சம் ரூபாய் மதிப்பில் ரேஷன் கடை கட்டடம் கட்டுவது; 12வது வார்டு அங்காளம்மன் கோவில் முதல் சத்தி ரோடு வரை, 15 லட்சம் ரூபாய் மதிப்பில் மழைநீர் வடிகாலை உயர்த்தி கட்டுவது; ஒன்பதாவது வார்டு எஸ்.எஸ்.பி.நகரில், 12 லட்சம் மதிப்பில் ஆழ்துளை கிணறு அமைத்து மின் மோட்டார் பொருத்தி குடிநீர் வினியோகம்; 18வது வார்டு மாணிக்கம்பாளையம் சுடுகாட்டில், 10 லட்சம் ரூபாய் மதிப்பில் வெளிப்புற சுற்றுச்சுவர் மற்றும் கான்கிரீட் தளம் அமைக்கும் பணியை துவக்கி வைத்தார்.
இதேபோல், 15வது நிதிக்குழு திட்டத்தில், 99.95 லட்சம் ரூபாய் மதிப்பில் நான்காவது வார்டு வி.கே.எல்.நகர், வசந்தம் நகர் பகுதிகளில் மழைநீர் வடிகால் மற்றும் தரைப்பாலம் அமைக்கும் பணி;
95.75 லட்சம் ரூபாய் மதிப்பில் ஏழாவது வார்டு காயிதே மில்லத், ஒரம்பு சந்து இடங்களில் மழைநீர் வடிகால் மற்றும் சிறுப்பாலம் அமைக்கும் பணி; 98.25 லட்சம் மதிப்பில், 13, 14 வார்டுக்கு உட்பட்ட வி.ஜி.பி.நகர், கந்தையன் வீதி மற்றும் கந்தையன் தோட்டம் பகுதிகளில் மழைநீர் வடிகால் மற்றும் சிறுபாலம் அமைக்கும் பணி என, 3.67 கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சி திட்டப்பணிகளை துவக்கி
வைத்தார்.
நிகழ்வுகளில் கலெக்டர் கந்தசாமி, கிழக்கு எம்.எல்.ஏ சந்திரகுமார், ஆணையர் அர்பித் ஜெயின், ஆர்.டி.ஓ., சிந்துஜா உட்பட பலர் கலந்து கொண்டனர்.