/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
போதையில் தகராறு செய்த வி.சி.,மாநில நிர்வாகிக்கு சிறை
/
போதையில் தகராறு செய்த வி.சி.,மாநில நிர்வாகிக்கு சிறை
போதையில் தகராறு செய்த வி.சி.,மாநில நிர்வாகிக்கு சிறை
போதையில் தகராறு செய்த வி.சி.,மாநில நிர்வாகிக்கு சிறை
ADDED : நவ 21, 2024 06:28 AM
தாராபுரம்: தாராபுரத்தில், குடிபோதையில் தகராறு செய்ததாக, விடுதலை சிறுத்தைகள் கட்சி விவசாய பிரிவு மாநில நிர்வாகியை, போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அடுத்த தொப்பம்பட்டியை சேர்ந்-தவர் சிவகுமார், 42. வி.சி. கட்சி மாநில விவசாய பிரிவு துணை செயலர். சங்கரண்டாம் பாளையத்தை சேர்ந்த அவரது நண்பர் காளிதாசுக்கு, தாராபுரம் பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் சீட்டு போட்டது தொடர்பாக, அங்குள்ள மேலாளர் நந்தகுமாரிடம் பிரச்னை ஏற்பட்டது.
இந்நிலையில், காளிதாசுக்கு ஆதரவாக பேசுவதற்காக, நிதி நிறுவ-னத்திற்கு நேற்று முன்தினம் மாலை, 4:00 மணியளவில் குடிபோ-தையில் சிவக்குமார் சென்றுள்ளார். அங்கிருந்த மேலாளர் நந்தகு-மாரிடம் தகாத வார்த்தை பேசி, அங்குள்ள நாற்காலியை உடைத்து, கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த தாராபுரம் போலீசார், சிவகுமாரை கைது செய்து, மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தி, தாராபுரம் கிளை சிறையில் அடைத்தனர்.

