ADDED : ஜூலை 04, 2024 08:42 AM
அந்தியூர், : அந்தியூர் பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து, விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அந்தியூர் பேரூராட்சி அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு, ஒன்றிய செயலாளர் தங்கராசு தலைமை வகித்தார். மாநில செயற்குழு உறுப்-பினர் கிருஷ்ணன், தொகுதி செயலாளர் வெற்றி செல்வன், மாவட்ட ஊடக மைய அமைப்பாளர் சுரேஷ் செங்கோடன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஈரோடு, திருப்பூர் மண்டல செய-லாளர் சிறுத்தை வள்ளுவன் பேசினார். மாட்டி-றைச்சி கடை கட்டித்தர மறுக்கும் பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து, ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோஷம் எழுப்பினர்.
அம்பேத்கர் மக்கள் இயக்க மாநில கொள்கை பரப்பு செயலர் கண்ணன், தாயக மக்கள் கட்சி நிறுவனர் தமிழ்செல்வன், ஒன்றிய துணை செயலர் ரமேஷ், பொருளாளர் துரை வளவன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.