sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

பொங்கல் பரிசு வினியோகத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்

/

பொங்கல் பரிசு வினியோகத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்

பொங்கல் பரிசு வினியோகத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்

பொங்கல் பரிசு வினியோகத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்

21


ADDED : ஜன 08, 2026 10:16 AM

Google News

ADDED : ஜன 08, 2026 10:16 AM

21


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: தமிழகம் முழுதும், ரேஷன் கடைகள் வாயிலாக, கார்டுதாரர்களுக்கு தலா, 3,000 ரூபாய் ரொக்கம் அடங்கிய, பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகத்தை இன்று (ஜனவரி 08) முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

தமிழக அரசு, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, 2.22 கோடி அரிசி ரேஷன் கார்டுதாரர்களுக்கு, தலா, 3,000 ரூபாய் ரொக்கம், ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை, முழு கரும்பு அடங்கிய பரிசு தொகுப்பை அறிவித்துள்ளது. அதனுடன் சேர்த்து, இலவச வேட்டி, சேலையும் வழங்கப்பட உள்ளன. இதற்காக கடைகளுக்கு, பச்சரிசி, சர்க்கரை, கரும்பு, வேட்டி, சேலை ஆகியவை அனுப்பப்பட்டு உள்ளன.

பொங்கல் பரிசு தொகுப்பை வாங்க, ஒரே சமயத்தில் கூட்டமாக வரக் கூடாது என்பதற்காக, எந்த தேதியில், எந்த நேரம் கடைக்கு வந்து வாங்க வேண்டும் என்ற விபரம் அடங்கிய, 'டோக்கனை' கார்டுதாரர்களின் வீடுகளில், கடந்த ஞாயிற்றுக் கிழமை முதல், ரேஷன் ஊழியர்கள் வழங்கி வந்தனர்.

இந்நிலையில் இன்று (ஜனவரி 08) சென்னை, ஆலந்தூர் நசரத்புரத்தில் உள்ள ரேஷன் கடையில், பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகத்தை, முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார். அதைத் தொடர்ந்து, அனைத்து கடைகளிலும் கார்டுதாரர்களுக்கு, பொங்கல் தொகுப்பு வழங்கும் துவங்கி உள்ளது.






      Dinamalar
      Follow us