நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பவானி: விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனை அவதுா-றாக பேசிய, புரட்சித்தமிழகம் கட்சி நிறுவன தலைவர் ஏர்போர்ட் மூர்த்தியை கண்டித்து, அம்மாபேட்டை அருகே பூனாச்சியில், வி.சி., கட்சியினர் நேற்று காலை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ஏர்ப்போர்ட் மூர்த்தி உருவ பொம்மையை எரித்து போராட்டம் நடத்தினர். வழக்கறிஞரணி மாநில துணை செய-லாளர் சுரேஷ் தலைமையில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். அம்மாபேட்டை போலீசார் அறிவுரையை தொடர்ந்து சாலை மறி-யலை கைவிட்டனர். இதனால் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.