/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
வீரக்குமாரசாமி கோவில் சிவராத்திரி தேரோட்டம்
/
வீரக்குமாரசாமி கோவில் சிவராத்திரி தேரோட்டம்
ADDED : மார் 10, 2024 03:33 AM
வெள்ளகோவில்: வெள்ளகோவில் வீரக்குமாரசாமி கோவில், 141 வது ஆண்டு மாசி மகாசிவராத்திரி தேர் திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் நடைபெற்றது.
வெள்ளகோவிலில் உள்ள வீரக்குமாரசாமி கோவில், மிகவும் பிரசித்தி பெற்றது. இக்கோவிலில் ஆண்டுதோறும் மாசி மாதம் மஹாசிவராத்திரியை முன்னிட்டு, தேர்த்
திருவிழா மூன்று நாட்களுக்கு சிறப்பாக நடைபெறும், இந்தாண்டு, 141வது மாசி சிவராத்திரியை முன்னிட்டு கடந்த மாதம் பிப்., 22ம் தேதி தேர் முகூர்த்த நிகழ்ச்சி நடைபெற்று, கடந்த 1ம் தேதி தேரில் கலசம் வைத்தல் நிகழ்ச்சி நடந்தது.
நேற்று முன்தினம் மாலை, பக்தர்கள் அரோகரா கோஷத்துடன் திருத்தேரை வடம் பிடித்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர். சிறிது துாரம் சென்றதும் விநாயகர் கோவில் அருகே தேர் நிறுத்தப்பட்டது. நேற்று மாலை இரண்டாம் நாள் தேரோட்டம் நடந்தது. இன்று மாலை, 6:00 மணிக்கு தேர் நிலையை அடைகிறது. தொடர்ந்து, 23ம் தேதி வரை மண்டப கட்டளை நடைபெற உள்ளது. தேர் திரு
விழாவில் ஹிந்துசமய அறநிலையத்துறை அதிகாரிகள், கோவில் குலத்தவர்கள் உட்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

