ADDED : ஆக 15, 2024 07:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: ஈரோடு, தென்றல் நகர் வீரமுத்தியம்மன் கோவில் திருவிழா விமர்சையாக நடந்தது.
ஈரோடு தென்றல் நகரில் அக்னி தெய்வம், வீரமுத்தியம்மன் கோவில் உள்ளது. இங்கு, 14ம் ஆண்டு திருவிழா கடந்த, 6ம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. நேற்று முன்தினம் காவிரி ஆற்றில் இருந்து தீர்த்தம், கரகம், காவடி, பால்குடம் எடுத்தும், அலகு குத்தியும், திரளான பக்தர்கள் கோவிலுக்கு வந்து, அம்மனுக்கு புனித நீர் ஊற்றி வழிபட்டனர். முக்கிய நிகழ்வான பொங்கல் விழா நேற்று நடந்தது. இதனையொட்டி அதிகாலை, 5:30 மணிக்கு திரளான பக்தர்கள் குண்டம் இறங்கி, நேர்த்திக்கடன் செலுத்தினர். அதன்பின், கோவில் வளாகத்தில் பொங்கல் வைக்கப்பட்டு, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. விழாவில் திரளான பக்தர்கள் அம்மனை வழிபட்டனர்.