ADDED : ஏப் 07, 2025 02:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: ஈரோடு மாநகரில் பல்வேறு கோவில்களில் கடந்த வாரம் பண்-டிகை நடந்தது. இதனால் காய்கறிக்கான தேவை அதிகரித்து விலையும் சற்று அதிகரித்தது. கோவில் விசேஷங்கள் முடிவுற்ற நிலையில் இயல்பு நிலை திரும்பியுள்ளது. இதனால் ஈரோடு நேதாஜி தினசரி மார்க்கெட்டில், பெரும்பாலான காய்கறிகளின் விலை நேற்று குறைந்து காணப்பட்டது.
காய்கறிகள் விலை விபரம் (கிலோ-ரூபாயில்): கத்தரி-30, வெண்டை-40, பாவற்காய்-50, முள்ளங்கி-30, சுரைக்காய்- 10, கேரட்-50, பீன்ஸ்-80 பீட்ரூட்-50, குடைமிளகாய்-50, பச்சை மிளகாய்-30, உருளை கிழங்கு-30, முட்டை கோஸ்-20, பீர்க்-கங்காய்-50, பட்டை அவரை-60, கருப்பு அவரை-80, இஞ்சி-50, முருங்கை காய்-30,புடலங்காய்-40, சின்ன, பெரிய வெங்காயம் தலா-40, தக்காளி-15. வெள்ளரி பிஞ்சு-30.

