தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/காய்கறி வியாபாரிகள் மேயரிடம் முறையீடு

காய்கறி வியாபாரிகள் மேயரிடம் முறையீடு

காய்கறி வியாபாரிகள் மேயரிடம் முறையீடு


ADDED : பிப் 29, 2024 04:10 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 29, 2024 04:10 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு: ஈரோடு ஆர்.கே.வி., சாலையில், நேதாஜி தினசரி காய்கறி மார்க்கெட் இயங்கிய இடத்தில் கட்டப்பட்ட நவீன காய்கறி சந்தை வளாகம், திடீரென நேதாஜி வணிக வளாகமாக மாற்றப்பட்டு, சமீபத்தில் திறக்கப்பட்டது. மேலும், சோலாரில் ஒருங்கிணைந்த மார்க்கெட் அமைக்கப்படும் என்று மாநகராட்சி உறுதி அளித்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த மாவட்ட தினசரி காய்கறி வியாபாரிகள் சங்கத்தை சேர்ந்த, 300க்கும் மேற்பட்டோர், மாநகராட்சி அலுவலகத்துக்கு நேற்று வந்தனர். புதிதாக திறக்கப்பட்ட வணிக வளாகத்தை, அங்கு கடை வைத்திருந்த வியாபாரிகளுக்கே ஒதுக்கி தரக்கோரி, மேயரிடம் முறையிட்டனர்.

உரிய நடவடிக்கை எடுப்பதாக, மேயர் நாகரத்தினம் தெரிவித்தார். இதையடுத்து காய்கறி வியாபாரிகளிடம், மாநகராட்சி அதிகாரிகள் ஒரு மணி நேரத்துக்கு மேலாக பேச்சுவார்த்தை நடத்தினர். ஆர்.கே.வி., சாலையில் புதிதாக திறக்கப்பட்ட வணிக வளாகத்துக்கான பொது ஏலம் இன்று நடக்கிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us