/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கிராவல் மண் அள்ள முயன்ற வாகனங்கள் பறிமுதல்
/
கிராவல் மண் அள்ள முயன்ற வாகனங்கள் பறிமுதல்
ADDED : நவ 20, 2025 01:46 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அந்தியூர், வெள்ளித்திருப்பூர் அருகே மாக்கல்புதுார் ஜெயராமன் தோட்டத்தில், நேற்று அனுமதி
யின்றி கிராவல் மண் அள்ளிக் கொண்டிருப்பதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது. வெள்ளித்திருப்பூர் எஸ்.ஐ., செல்வம் தலைமையிலான போலீசார், அங்கு சென்று சோதனை செய்தபோது, அனுமதியின்றி கிராவல் மண் கடத்த முயன்றது தெரியவந்தது.
இதையடுத்து, பூதப்பாடி அருகிலுள்ள
எஸ்.பி., கவுண்டனுார் காலனியை சேர்ந்த டிப்பர் லாரி டிரைவர் ஜெகதீசன், 44; பட்லுார் நால்ரோட்டை சேர்ந்த பொக்லைன் டிரைவர் முருகன், 45; ஆகியோரை, போலீஸ் ஸ்டேஷன் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் டிப்பர் லாரி, பொக்லைன் ஆகியன
பறிமுதல் செய்யப்பட்டன.

