தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/சென்னிமலை மலைப்பாதையில் 15ம் தேதி கார்கள் செல்ல தடை

சென்னிமலை மலைப்பாதையில் 15ம் தேதி கார்கள் செல்ல தடை

சென்னிமலை மலைப்பாதையில் 15ம் தேதி கார்கள் செல்ல தடை


ADDED : நவ 13, 2026 06:10 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 13, 2026 06:10 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னிமலை:சென்னிமலையில் மலை மீதுள்ள சுப்ரமணிய சுவாமி கோவிலில், கந்த சஷ்டி விழா தற்போது நடந்து வருகிறது.

முன்னதாக கடந்த, 10ம் தேதி காப்பு கட்டுதலுடன் விழா தொடங்கியது. அன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள், கார் மற்றும் டூவீலர்களில் குவிந்ததால், மலைக்கோவில் பாதையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சஷ்டி விழா முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் வரும், 15 ம் தேதி நடக்கவுள்ளது. பெற உள்ளது. அன்றைய தினமும் பக்தர்கள் கூட்டம் அதிகம் இருக்கும் என்பதாலும், போக்குவரத்து நெரிசலை தவிர்க்கவும், மலைப்பாதை வழியாக கார் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் டூவீலர்கள் அல்லது கோவில் நிர்வாக பஸ்களில் பயணிக்கலாம் என்று, கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

திருக்கல்யாண வைபோகம்நடக்குமிடம் திடீர் மாற்றம்

சஷ்டி விழா நிறைவாக வள்ளி-தேவசேனா சமேத முத்துக்குமாரசுவாமி திருக்கல்யாண வைபவம், வரும், 16-ம் தேதி காலை, 9:00 மணிக்கு நடக்கிறது. வழக்கமாக சென்னிமலை கைலாசநாதர் கோவிலில் நடக்கும். நடப்பாண்டு பக்தர்களின் நலன், பாதுகாப்பு மற்றும் விரிவான வசதிகளை கருத்தில் கொண்டு, சென்னிமலை மலைக்கோவில் அடிவாரத்தில் உள்ள கோவில் அலுவலக வளாகத்தில் பிரமாண்ட மேடை அமைத்து நடக்கும் என்று, கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us