/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
இடைத்தேர்தலுக்குஇ.வி.எம்.,கள் சரிபார்ப்பு
/
இடைத்தேர்தலுக்குஇ.வி.எம்.,கள் சரிபார்ப்பு
ADDED : ஏப் 23, 2025 01:26 AM
ஈரோடு:ஈரோடு மாவட்டத்தில் காலியாக உள்ள, 9 டவுன் பஞ்., வார்டு கவுன்சிலர் பதவிக்கான இடைத்தேர்தலை முன்னிட்டு, கலெக்டர் அலுவலகத்தில் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் (இ.வி.எம்.,) முதற்கட்ட சரி பார்ப்பு பணி நடந்தது.
மாவட்டத்தில் டவுன் பஞ்., வாரியாக அந்தியூர் - 17 வது வார்டு, பவானி சாகர் - 11, சென்னசமுத்திரம்-7, கருமாண்டிசெல்லிபாளையம்-2, கிளாம்பாடி-10, கூகலுார்-3 மற்றும் 5, பள்ளபாளையம்-11, வாணிபுத்துார்-4 என, 9 வார்டு கவுன்சிலர் பதவி காலியாக உள்ளது. மாநில தேர்தல் ஆணையம் அறிவிக்கும் நாளில் இடைத்தேர்தல் நடக்கும். இ.வி.எம்.,கள் மூலமே நடக்க உள்ளதால் முதற்கட்ட சரிபார்ப்பு பணி நேற்று நடந்தது. கலெக்டர் ராஜகோபால் சுன்கரா ஆய்வு செய்தார்.