ADDED : அக் 21, 2026 05:51 AM
அ நிறம் | அளவு
ஈரோடு:விஜயதசமி
தினமான நேற்று, ஈரோடு ரயில்வே காலனி சித்தி விநாயகர் கோவிலில்
வித்யாரம்பம் நிகழ்ச்சி நடந்தது. ஏராளமான பெற்றோர் குழந்தைகளுடன்
வந்து சிறப்பு வழிபாடுகளில் ஈடுபட்டனர்.
குழந்தைகளுக்கு பேச்சு
உச்சரிப்பு சரியாக வர, அவர்களின் நாவில் தேன் மூலம் 'ஓம்' என எழுதி
கொண்டனர். அதை தொடர்ந்து சரஸ்வதி தேவி சிலைக்கு முன் அமர்ந்து
பச்சரிசி, நெல் மணிகளில் 'அ' என்ற அட்சரம் எழுதி, பள்ளி செல்லும்
நிகழ்வை தொடங்கினர்.இதேபோல் மாநகரில் பல்வேறு கோவில்களில் விஜயதசமி வழிபாட்டுடன் வித்யாரம்பம் நடந்தது.
