ADDED : அக் 21, 2026 05:51 AM

அ நிறம் | அளவு
பவானிசாகர்:பவானிசாகர்
எம்.எல்.ஏ., அலுவலகத்தில் நேற்று, ஆயுத பூஜை, விஜயதசமி பண்டிகை,
எம்.எல்.ஏ., தமிழ்செல்வி தலைமையில் கொண்டாடப்பட்டது.
அலுவலக வளாகம்
முழுவதும் மலர்களால் தோரணம் கட்டி அலங்கரித்து நடந்த
கொண்டாட்டத்தில், த.வெ.க, நகர, ஒன்றிய, பேரூர் கழக நிர்வாகிகள்,
உறுப்பினர்கள் மற்றும் மக்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும்
பிரசாதம் வழங்கப்பட்டது.
* கோபி அரசு மருத்துவமனை,
கெட்டிச்செவியூர் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சொந்தமானது என
மூன்று 108 அவசர கால ஆம்புலன்ஸ் வாகனங்கள், இலவச தாய், சேய் வாகனம்,
இலவச அமரர் ஊர்தி என ஐந்து வாகனங்களுக்கும், கோபி அரசு மருத்துவமனை
வளாகத்தில் நேற்று நிறுத்தப்பட்டு ஆயூதபூஜை கொண்டாடினர்.
