/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கிராம உதவியாளர் பணி விண்ணப்பம் சரிபார்ப்பு
/
கிராம உதவியாளர் பணி விண்ணப்பம் சரிபார்ப்பு
ADDED : ஆக 19, 2025 02:54 AM
கோபி, கோபி தாலுகாவில் காலியாக உள்ள, 19 கிராம உதவியாளர் பணியிடங்களுக்கு, கடந்த, 5ம் தேதி வரை விண்ணப்பம் கோரப்பட்டது. மொத்தம் 1,013 பேர் விண்ணப்பித்தனர். இவர்களில் எம்.பி.ஏ., பி.இ., பி.எஸ்.சி., எம்.எச்.சி., எம்.பில்., படித்தவர்களே அதிகம் விண்ணப்பித்திருந்தனர்.
இந்நிலையில் கோபி தாலுகா அலுவலகத்தில், தகுதியானவர்களை தேர்வு செய்யும் பொருட்டு விண்ணப்பம் சரிபார்ப்பு பணி நடந்து வருகிறது. நேற்று வரை, 80 சதவீதம் நிறைவு பெற்றுள்ளது. இதையடுத்து தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு, சைக்கிள் மற்றும் இரு சக்கர வாகனம் ஓட்டும் திறன், வாசித்தல் மற்றும் எழுதுதல் தேர்வு நடக்கும். நேர்முகத்தேர்வுக்கு அழைப்பு கடிதம் அனுப்பி வைக்கப்படும் என்று வருவாய் துறையினர் தெரிவித்தனர்.