ADDED : நவ 04, 2026 07:34 AM

ஈரோடு:ஈரோடு அருகே திண்டலில் உள்ள, மாவட்ட சுகாதார அலுவலகம் முன், தமிழ்நாடு அரசு கிராம, பகுதி, சமுதாய, சுகாதார செவிலியர் கூட்டமைப்பு சார்பில், ஆர்ப்பாட்டம் நடந்தது.
கூட்டியக்க மாவட்ட செயலர் லதா தலைமை வகித்தார். துணை சுகாதார நிலையங்களில் இருந்து இடைநிலை சுகாதார பணியாளரை அப்புறப்படுத்த வேண்டும். தமிழக சுகாதாரத்துறையில், 40 ஆண்டுகளாக உள்ள வி.எச்.என்., - எஸ்.எச்.என்., - சி.எச்.என்., மருத்துவர், வட்டார மருத்துவர், மாவட்ட மருத்துவ அலுவலர் என்ற கட்டமைப்பு சீர்குலைக்கும் என்பதால் அப்பெயரை வழங்குவதை தவிர்க்க வேண்டும்.களப்பணியாளர்களான தங்களின் பணிச்சூழலை கருத்தில் கொண்டு, வருகைப்பதிவில் ஏற்கனவே உள்ள முறையே நடைமுறைப்படுத்த வேண்டும். கிராம சுகாதார செவிலியர்களுக்கு பணி மூப்பு பட்டியல் மதிப்பெண் அடிப்படையில் பதவி உயர்வு போடப்பட்டிருந்தால், மதிப்பெண்களுடன் பணி மூப்பு பட்டியலை வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர். நிர்வாகிகள் மணிமேகலை, கோமதி, ேஹமாவதி, உஷாராணி, கற்பகம், சந்தானலட்சுமி, செந்தாமலர் உட்பட பலர் பங்கேற்றனர்.
