/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
வன்முறை துாண்டும் பதிவு: விஜயை கைது செய்ய மனு
/
வன்முறை துாண்டும் பதிவு: விஜயை கைது செய்ய மனு
ADDED : அக் 04, 2025 12:54 AM
ஈரோடு, தமிழக எழுச்சி பேரவை மாநில தலைவர் பிரபாகரன் தலைமையில், ஈரோடு எஸ்.பி., அலுவலகத்தில் நேற்று புகார் மனு வழங்கி கூறியதாவது:கரூர், வேலுசாமிபுரத்தில் த.வெ.க., தலைவர் விஜய் பரப்புரையின்போது, அதிகமாக மக்கள் கூடி, தாமதமாக விஜய் வந்ததால், 41 பேர் இறந்தனர். இச்செயல்பாட்டுக்கு விஜய் முக்கிய காரணமாக இருந்துள்ளார். போலீஸ் விசாரணை நடந்து வரும் நிலையில், சமூக வலைதளங்களில் அரசுக்கு எதிராக பொய், அவதுாறுகளை த.வெ.க., நிர்வாகிகள் பரப்பி வருகின்றனர்.
குறிப்பாக, 'போலீஸ் பாதுகாப்பில்லை. குறுகிய இடத்தை வழங்கினர். திட்டமிட்ட சதி, வன்முறைதான் தீர்வு, ஆட்சியை கலைக்க வேண்டும். நேபாளம் போல ஆகும்' என டெலிகிராம், வாட்ஸ் ஆப் என பல தளங்களில் தனியாகவும், குரூப் துவங்கியும் வன்முறையை துாண்டும்படி பதிவிடுகின்றனர். எனவே விஜய், த.வெ.க., நிர்வாகிகள் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா உட்பட, 30க்கும் மேற்பட்டோரை கைது செய்ய வேண்டும். இவ்வாறு கூறினார்.