/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
விஸ்வகர்மா ஜெயந்தி தேசிய தொழிலாளர் தின கொண்டாட்டம்
/
விஸ்வகர்மா ஜெயந்தி தேசிய தொழிலாளர் தின கொண்டாட்டம்
விஸ்வகர்மா ஜெயந்தி தேசிய தொழிலாளர் தின கொண்டாட்டம்
விஸ்வகர்மா ஜெயந்தி தேசிய தொழிலாளர் தின கொண்டாட்டம்
ADDED : செப் 18, 2024 01:29 AM
விஸ்வகர்மா ஜெயந்தி தேசிய
தொழிலாளர் தின கொண்டாட்டம்
ஈரோடு, செப். 18-
ஈரோட்டில், பாரதிய மஸ்துார் சங்கம் (பி.எம்.எஸ்.,) சார்பில் விஸ்வகர்மா ஜெயந்தி தேசிய தொழிலாளர் தின கூட்டம் நடந்தது.
மாவட்ட தலைவர் பிரகாஷ் தலைமை வகித்தார். செயலாளர் ரமேஷ் முன்னிலை வகித்தார். பொருளாளர் சந்தோஷ்குமார் வரவேற்றார். உலகின் முதல் தொழிலாளி விஸ்வகர்மா தியாகத்தை போற்றும் வகையில், மத்திய அரசு, மூன்று வகையான விருதுகளை செப்., 17 ல் வழங்கி வருகிறது.
அந்நாளை, மத்திய பிரதேசம், குஜராத், அஸ்ஸாம் உட்பட சில மாநிலங்களில் விடுமுறை தினமாக அறிவித்து கொண்டாடுகின்றனர். அதுபோல தமிழகத்திலும் அன்றைய தினத்தை சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறை தினமாக அறிவிக்க வேண்டும். தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம், 5,000 ரூபாயாக உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தினர். நிர்வாகிகள் முருகன், சோமு, பெரியசாமி, தண்டபாணி, மணிகண்டன் உட்பட பலர் பங்கேற்றனர்.
மாவட்ட ஆட்டோ சங்க பொறுப்பாளர் கார்த்திக்பிரபு நன்றி கூறினார்.