/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
தச்சு பயிலரங்கம் மூடல் விஸ்வகர்மா பேரவை மனு
/
தச்சு பயிலரங்கம் மூடல் விஸ்வகர்மா பேரவை மனு
ADDED : நவ 18, 2025 01:50 AM
ஈரோடு அகில இந்திய விஸ்வகர்மா பேரவை, ஈரோடு மாவட்ட தலைவர் மூர்த்தி தலைமையில், ஈரோடு டி.ஆர்.ஓ.,விடம், மனு வழங்கி கூறியதாவது: சத்தியமங்கலம் காயிதே மில்லத் வீதியில் உள்ள தச்சு பயிலரங்கம் தற்போது குப்பை கழிவு சுத்திகரிப்பு நிலையமாக உள்ளது.
புன்செய் புளியம்பட்டி, நல்லுார், மாதம்பாளையம் ஆகிய கிராம கைவினை கலைஞர்கள் பயிலும் இடமாக இருந்த நிலையம் மூடப்பட்டு விட்டது. இதை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். அறநிலையத்துறைக்கு உட்பட்ட கோவில்களில், விஸ்வகர்மா சமூகத்தினரையும் நியமிக்க வேண்டும். இதன்படி புன்செய் புளியம்பட்டி முத்துவிநாயகர் காமாட்சியம்மன் கோவில் அறங்காவலர் குழு, பண்ணாரி அம்மன் கோவில் அறங்காவலர் குழுவிலும் இணைக்க வேண்டும்.
இவ்வாறு கூறினர்.

