/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
'நொய்யலில் விடாதீங்க காவிரியில் விடுங்க...!'
/
'நொய்யலில் விடாதீங்க காவிரியில் விடுங்க...!'
ADDED : நவ 18, 2025 01:50 AM
ஈரோடு, கொடுமுடி யூனியன் அய்யம்பாளையம் பஞ்., மக்கள், ஈரோடு டி.ஆர்.ஓ., சாந்தகுமாரிடம், நேற்று வழங்கிய மனுவில் கூறியதாவது: அய்யம்பாளையம் பஞ்., பகுதி நல்லியாகவுண்டன்புதுார் அருகே உள்ள குட்டலாம்பாறை பகுதியில், டவுன் பஞ்.,ல் தேங்கும் சாக்கடை கழிவு நீர், பிற கழிவு நீரை குழாயில் சேகரித்து சுத்திகரிக்க உள்ளனர்.
இதற்கான அமைப்பை ஏற்படுத்துகின்றனர். இதற்கான ஆய்வின்போது அனைத்து வகை கழிவு நீரையும் சுத்திகரிப்பு செய்து அருகேயுள்ள நொய்யலில் வெளியேற்ற உள்ளதாக அறிந்தோம். அவ்வாறு செய்யக்கூடாது. நொய்யல் ஆற்று நீரால் எங்களது கிணறு, நிலத்தடி நீரை பெறுகிறது. பாசன நிலங்களுக்கும் பயன்படுத்துகிறோம். சுத்திகரிப்பு செய்யப்படும் கழிவு நீரை நொய்யல் ஆற்றில் விடாமல், அதனை அடுத்துள்ள காவிரி ஆற்றில் விட வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.

