/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ரகசியமாக பிணம் புதைப்பு ஆசனுார் போலீசில் புகார்
/
ரகசியமாக பிணம் புதைப்பு ஆசனுார் போலீசில் புகார்
ADDED : நவ 18, 2025 01:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு, சத்தி தாலுகா குத்தியாலத்துார் திங்களூர் ஆ கிராம வி.ஏ.ஓ., சுபாஷ்குமார், 41; ஆசனுார் போலீசில் இவர் அளித்த புகாரில் கூறியிருப்பதாவது:
திங்களூர் ஆ கிராமம் செங்குட்டுவன்-மேகலாவுக்கு சொந்தமான இடத்தில், துர்நாற்றம் வீசுவதாக சி.கே.பாளையம் சிவனப்பா தெரிவித்தார். இதன் அடிப்படையில் அங்கு சோதனை செய்தபோது, ஒரு உடல் புதைக்கப்பட்டிருந்தது.
இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு புகாரில் தெரிவித்திருந்தார். ஆசனுார் போலீசார், சந்தேக மரணம் என வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

